பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்வு

நாமக்கல் –  டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் 29.07.2021 அன்று “பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்வு –ஒளிமயமான எதிர்காலம் தரும் கலை மற்றும் அறிவியல் படிப்புகள்” என்ற தலைப்பிலான நேரடி நிகழ்வு நடைபெற்றது.

       கரூர் – ஜெயம் தொலைக்காட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஆர். லட்சுமிநாராயணன் மற்றும் உயர்கல்வி இயக்குநர் முனைவர் அரசுபரமேசுவரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  

      இதில் கலை, அறிவியல் படிப்புகளில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள்,  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகள்,  மத்திய மாநில அரசு பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்த விவரம்,  கல்லூரியில் செயல்பட்டுவரும் வேலை வாய்ப்பு அமைப்புகள்,  கல்லூரியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள்,  கல்லூரி மாணவியர் வசதிக்காக கல்லூரியில் உள்ள விடுதிகள் & பேருந்து வசதிகள் போன்றவை குறித்து எடுத்துரைத்தனர்.

 கரூர்,  குளித்தலை, கிருஷ்ணராயபுரம், க. பரமத்தி, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, தென்னிலை, சின்னதாராபுரம், தோகைமலை, கடவூர்,  தாந்தோணிமலை, வெள்ளியணை, மாயனூர்,  உப்பிடமங்கலம், புலியூர், மண்மங்கலம், வாங்கல், புகளூர்,  வேலாயுதம்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களும்,  பெற்றோர்களும் தங்கள் சந்தேகத்தினை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொண்டனர்.     

இந்நிகழ்வில் இளநிலை – கணினி அறிவியல் துறைத்தலைவர் ஆர். நவமணி கலந்து கொண்டார்